பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

கவனிக்க!

இந்தப் பகுதியில் வரும் செய்திகள் யாவும் 4 தமிழ் மீடியா இணையத்தளத்தினால்  பிரத்தியேகமாக சேகரிகப்பட்டு, பிரசுரிக்கப்டும், செய்திகளாகும். இச் செய்திகளைப் பிரதி பண்ணி, தங்கள் இணையத்தளங்களில், வலைப்பதிவுகளில் பிரசுரிப்போர், தயவு செய்து, செய்திகளை மீள் பிரசுரம் செய்யும் நடைமுறைகளுக்கு ஏற்ப 4தமிழ் மீடியாவிற்கான இணைப்புடன் பிரசுரிக்க வேண்டுகின்றோம் - 4Tamilmedia Team

மூத்த காதாசிரியரின் மூளையைத் திருடும் இயக்குனர்!
Written by Amsha   
Saturday, 10 July 2010 19:04
AddThis Social Bookmark Button
மலையாள திரையுலகின் தவிர்க்கமுடியாத ஆளுமைகளில் ஒருவர் எம்.டி.வி என்று தென்னிந்திய சினிமா உலகினரால் செல்லமாக அழைக்கப்படும் எம்.டி.வாசுதேவன் நாயர். மலையாள இலக்கியத்தின் செழுமையான நாவலாசிரியராக முத்திரை பதித்த இவர், 1968 ல் வெளிவந்த ‘முறைப்பெண்’ என்ற படம் மூலம் திரைக்காதாசிரியராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர்.

மதராஸப்பட்டினம் பிரீமியர் ஷோவில் திரண்ட திரையுலகத்தினர்

ஆர்யா நடிக்கும் சிக்குபுக்கு சூட்டிங்க் ஸ்பாட் ஹேலரி

நடிகை மஞ்சரி படங்கள்

நடிகை ஷெரீன் புதிய அசத்தும் படங்கள்

கோகுலம் - பத்மபிரியா ஹேலரி

we are family இல் கஜோல் புதிய படங்கள்

அனந்த புரத்து வீடு போஸ்டர்

வம்சம் புதிய ஹேலரி

திரிசா khatta meetha வில் ஸ்டில்ஸ்

சிக்கு புக்கு ஆர்யா - ஸ்ரேயா படங்கள்

வானம் சிம்பு ஸ்டில்ஸ்

இவர் திரைக்கதையை கையிலெடுத்த போது, தன்னுடைய உணர்ச்சிகரமான நாவல்கள் மூலம் பெரும் புகழ் பெற்றிருந்தார். மாத்ருபூமி வார இதழில் துணை ஆசிரியராகவும் இதழியல் முகம் காட்டிய  இவர், மலையாளத் திரையுலகு கண்ட உச்ச நட்சத்திர எழுத்தாளர் என்றால் அது மிகையில்லை.

ஏறத்தாழ நாற்பது வருடம் எம்.டி.வாசுதேவன் நாயர் மலையாளத் திரையுலகில் நட்சத்திர நடிகர்களுக்கு இணையான முக்கியத்துவத்துடன் இருந்தார்.  ஆட்சி நடத்தினார்.

மலையாளத் திரையுலகில் இரண்டு தலைமுறை நடிகர்கள் அவரது கதாபாத்திரங்களை நடித்திருக்கிறார்கள். இரண்டு தலைமுறை இயக்குநர்கள் அவரது கதையை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

எம்.டி. மலையாளத் திரையுலகில் ஒரு சமகால வரலாற்று நிகழ்வு என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். மலையாளத் திரையுலகை திரும்பிப் பார்க்கையில் முக்கியமான படங்களாக நூறு படங்களைப் பட்டியலிட்டால் முப்பது படங்கள் எம்.டி. எழுதியவையாக இருக்கும். இன்றைய மலையாளத் திரை ரசனை என்பதே எம்.டி.யால் படிப்படியாக வளர்த்து எடுக்கப்பட்ட ஒன்றுதான் என்பது மூத்த மலையாள சினிமா விமர்சகர்களின் கருத்து.

இவருக்குப் பிறகு பத்மராஜன் போன்ற முத்திரை பதித்த திரைக்காதாசிரியர்கள் வந்தாலும் இவரது இடத்தை இன்றுவரை நிரப்ப ஆள் இல்லை என்பதுதான் உண்மை. இந்தியத் திரைகதைக்கு புதிய புதிய உத்திகளை பரிசளித்த இவர் , இத்தனை முதுமையிலும் கடந்த ஆண்டு கமல் நடிக்க இருந்த நான்கு மொழிப் படத்துக்கு கதை திரைக்கதை எழுதினார்.

ரகுமானின் வந்தே மாதரம், பிரே ஃபார் மை உட்பட பல மியூசிக் வீடியோகளையும், ஒரு உலக சினிமாவையும் இயக்கிய பரத் பாலா ஆங்கிலம், ஜப்பானிஷ், தமிழ், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் சுமார் 100 கோடி மதிப்பீட்டில் தயாராக இருந்த அந்தப் படம் 19th step!  இந்தப் படத்துக்கான கதை, திரைக்கதை எழுதியவர் எம்.டிவிதான்.

பௌத்தம் வாழ்ந்துகொண்டிருந்த பதினான்காம் நூற்றாண்டில் நடக்கும் கதை. ஒரு ஜப்பானிய இளைஞன் (ஹீரோ), தனது கிராமத்தையே உயிரோடு எரித்த எதிரிகளை அழிக்க, களறிக் கலையின் 19-வது உத்தியை கற்றுக்கொள்ள கேரளத்தின் மலபாருக்கு வருகிறான். அங்கே புகழ்பெற்ற களறி குருவாக இருக்கிறார் கமல்.

அவரிடம் ஒரு ராயல்(இளவரசி) ஸ்டூடெண்டாக களறி கற்கிறார் அசின். பெரிய போராட்டத்துக்குப் பிறகு கமலிடம் சீடனாக சேரும் ஜப்பானிய மாணவனுக்கு களறிக் கலையின் 19-வது ரகசியமான உருமியை (உருமி தமிழ்ச்சொல்தான். இப்போதும் தமிழ் சிலம்பக்கலை மரபில் சுருள் வாளாக இருப்பதுதான் உருமி வாள்.

ஒரு கைப்பிடியில் பல நீளமான நாக்குகள் உள்ள சுருள் வாள்) சுழற்றும் ரகசியத்தைச் சொல்லிதருகிறார் கமல். 19-வது உத்தியை கற்றுக் கொண்ட ஹீரோ, சேரநாட்டுக்கு வந்த ஆபத்தை முறியடித்து ஜப்பான் புறப்படுகிறான். அங்கே அவன் தனது எதிரிகளை, உருமியை பயன்படுத்தி  அழித்தானா என்பதுதான் கமலின் பிடிவாதத்தால் டிராப் ஆன அந்தப் படத்தின் அவுட் லைன் என்கிறார்கள் பரத்பாலவின் உதவியாளர்கள்.

இதில் என்ன கொடுமை என்றால் இந்தத் திரைக்கதை மலையாளம் திரைக்கதை எழுத்தாளர்களுக்கு தெரிந்த ஒன்றுதானாம்! எம்.டி.வி எப்போதும் தாம் எழுதும் திரைக்கதையின் ரகசியம் காப்பதில்லை. திரைக்கதை பற்றி தன்னிடம் விவாதிக்க வரும் அனைவருக்கும் தனது லேட்டஸ்ட் ஸ்கிரிப்டை வாசிக்க கொடுத்து உற்சாகப்படுத்துவாராம்.

மலையாள ஊடகமும் எம்.டிவியின் திரைக்கதைகள் பற்றி தகவல் கிடைத்தாலும் அவர் மீதிருக்கும் மரியாதையால் அதைப் பற்றி செய்தி போடுவதில்லை.

ஆனால் ஒரு சக மலையாள எழுத்தாளர், இயக்குனரே எம்.டி.வியின் மூளை உழைப்பை அவமானப்படுத்தும் விதமாக, எம்.டி.வியின் திரைகதையை உள்வாங்கிகொண்டு, அதே உருமியை மையப் படுத்தி, சந்தோஷ் சிவன் அடுத்து இயக்க இருக்கும் படத்துக்கு திரைக்கதை எழுதிக்கொடுத்திருகிறார் என்கிறார்கள்.

சந்தோஷ் சிவன் இயக்கபோகும் படமும் அதே காலகட்டத்தின் பிரியட் பிலிம் என்பதோடு, உறுமியே முக்கிய பாத்திரமாக கதையில் உறுமுகிறதாம். மேலும் 19th step போலவே பழிவாங்கும் கதையாம். இதனால் படத்துக்கு உறுமி என்றே தலைப்பு வைத்து விட்டார்கள்.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நல்ல தொழில் நுட்பக் கலைஞராக இருந்தும், இதுபற்றி எந்த பிரஞையும் இல்லாமல் அந்த எழுத்தாளரோடு கைகோர்த்திருகிறார் என்று பொறுமுகிறார்கள்  எம்.டி.வியின் நட்பு வட்டத்தில்.

இந்த தகவல் எம்.டி.வியின் காதுக்கும் சென்றிருக்கிறது. அவரோ அமைதியா புன்னகை பூத்து விட்டு, உருமி எனக்கு மட்டும் சொந்தமானதல்ல. கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும் என்றாராம்.

இதைக் கேள்விப்பட்ட பரத்பாலா கண்கலங்கி விட்டதாக தகவல் கிடைகிறது. பிரிதிவிராஜும் ஜெனலியாவும் நடிக்க இருக்கும் உருமியை தமிழ் , மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் எடுக்க இருக்கிறாராம் சந்தோஷ் சிவன்.

இந்திய திரைக்கதையின் குருவான எம்.டிவியின் திரைக்கதையின் மையப்புள்ளியை நகலேடுத்து, கொள்ளைப்புரம் வழியாக கதை செய்து படமெடுத்து விருது வாங்குவதுதான் சந்தோஷ் சிவனின் லேட்டஸ்ட் ஸ்டைலா என்கிறார்கள் திருவனந்தபுரம் வட்டாரத்தில்.
நிற்க. அந்த அற்புதமான எழுத்தாளர்,

இயக்குனர் பெயரைச் சொல்லாமல் விட்டால் எப்படி என்கிறீர்களா? கேரளா கபே என்ற தலைப்பில் பத்து குறும்படங்கள் இணைந்த ஒரு மலையாளப் படம் உருவாக்கப்பட்டது. விமர்சகர்களின் பாராட்டுகளை அள்ளிய அந்தப்படத்தில் ஐலாண்ட் எக்ஸ்பிரஸ் என்ற குறும்படத்தை இயக்கிய ஷங்கர் ராமகிருஷ்ணன்தான் அந்த  நகலாளர் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கதறலோடு தகவல் தருகின்றன.

மேலும் சூடான சினிமா செய்திகள்

மூத்த காதாசிரியரின் மூளையைத் திருடும் இயக்குனர்!  

சீனியர் இயக்குநர்களின் புதிய அவதாரம் 

எகிறி வரும் எந்திரன் ஃபீவர் - மலேசியாவில் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா

நான்கு நடிகைகளின் கண்ணீர் துளிகள்! 

கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்! 

களவாணியின் களவாணி - நசீர் பிடியில் விமல்! 

அசினுக்கு தடை?

இளையதளபதியின் காவல்! + காதல்

கடைசியாக சிம்புவும் சரண்!

பணம் வாங்க மறுத்த ஸ்ருதிஹாசன்…! 

தமி‌ழ்‌ தி‌ரை‌ப்‌பட தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ சங்‌க தே‌ர்‌தல் - கே‌.ஆர்‌.ஜி‌. தலை‌மை‌யி‌ல்‌ மற்றுமொரு அணி‌! 

இணைக்க முயன்ற சேரன்…! எள்ளி நகையாடிய நரேன்..? 

கோலிவுட்டின் முதல் ஐந்து தேவதைகள்..! 

எந்திரன் உள்ளே என்ன நடக்கிறது? 

நமீதாவுக்கு என்ன நடந்தது ? - செத்துப் பிழைத்தார் .. 

மேலும் ஹாட் சினிமா செய்திகள் இங்கே கிளிக்

உங்கள் கருத்துக்கள்

avatar தாமிரன்
0
 
 
பிச்சிட்ட போ! இன்னாம ஒரு ஹாட் நியூஸ் குடுத்துகிற! இதே மாறிக்கே மெயிண்டைன் பண்ணிக்கோ! இன்னா புரிஞ்சிகினியா நைனா? கீப்பிட்டு அப்பு!
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar ரசிகன்
0
 
 
வித்தியாசமான தளமாகத்தான் 4தமிழ் இருக்கிறது. சினிமாத் தகவல்களைக் கூட உண்மையாகவும், பிரயோசனமாகவும் தரும் உங்கள் முயற்சி தொடர்க. வாழ்த்துக்கள்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Saturday, 10 July 2010 20:47
 

கவனிக்க!

இந்தப் பகுதியில் வரும் செய்திகள் யாவும் 4 தமிழ் மீடியா இணையத்தளத்தினால்  பிரத்தியேகமாக சேகரிகப்பட்டு, பிரசுரிக்கப்டும், செய்திகளாகும். இச் செய்திகளைப் பிரதி பண்ணி, தங்கள் இணையத்தளங்களில், வலைப்பதிவுகளில் பிரசுரிப்போர், தயவு செய்து, செய்திகளை மீள் பிரசுரம் செய்யும் நடைமுறைகளுக்கு ஏற்ப 4தமிழ் மீடியாவிற்கான இணைப்புடன் பிரசுரிக்க வேண்டுகின்றோம் - 4Tamilmedia Team

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது