பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

சுவிஸ் நட்சத்திரம் fabian Cancellara, உலககிண்ண போட்டிகளில் அபார வெற்றி
Written by Sara   
Friday, 25 September 2009 10:20
AddThis Social Bookmark Button

சுவிற்சர்லாந்தின், சைக்கிள் ஓட்ட நட்சத்திரம் பெபி்யன் கன்செலாரா(Fabian Cancellara (28)வின் நீண்டநாள் கனவினை சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் சைக்கிள் ஓட்டப்பந்தயத்திற்கான உலக கிண்ணப்போட்டிகளில் நேற்று நடைபெற்ற டைம் ட்ரையல் (Time Trial) சுற்றில் மூலம் நிறைவேற்றிக்கொண்டார்.

சொந்த மண்ணில், தனது நாட்டு மக்களின் முன், சாம்பியன் ஆகவேண்டும் என்ற அவருடைய கனவு நேற்றையதினம் நடந்தது.

சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டாவது இடத்தை கைப்பற்றிய கன்செலாரா,  நேற்றைய தினம் உலக கிண்ன போட்டிகளில், 65 போட்டியாளர்களிற்கு போட்டியாக பங்குபற்றினார். தனது ஓட்டத்தினை ஆரம்பிக்கும் போதே சுவிஸ் மக்களின் பலத்த கரகோஷமும், பலத்த எதிர்பார்ப்பும் சேர்ந்து ஒலித்தது.

தென் சுவிற்சர்லாந்தின் டிச்சினோ மாநிலத்தில் மெந்திரிசியோ நகரினை சுற்றி அமைந்திருந்த ஓட்டப்பாதையில் மொத்தம், மூன்று சுற்றுக்களாக 49.8 கி.மீ தூரம் கடக்க வேண்டியவாறு நேற்றைய போட்டி ஒழுங்கமைக்கப்பட்டது.

முதலாவது சுற்று (Lap) இலேயே கன்செலாரா தனது ஓட்டவேகத்தை அதிகரித்துக்கொண்டார். எனினும் ஒவ்வொரு சுற்றிலும் 360 மீற்றர் உயரனாம மேடுப்பகுதியை கடக்க வேண்டியிருந்தது.

மூன்றாவது சுற்றில் ரசிகர்களின் பலத்த கரகோஷத்திற்கு மத்தியில் நிறைவடையும் இடத்தினை கன்செலாரா எட்டிய போது மொத்தம் 57 நிமிடங்கள் 55.74 செக்கன்கள் மட்டுமே எடுத்துக்கொண்டார். இது அவருடைய சக போட்டியாளர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் ஓடத்தொடங்கும் வரை, 1 மணித்தியாலத்திற்கு மேலாக நேரத்தை எடுத்துக்கொண்டே ஏனையவர்கள் ஓடி முடித்திருந்தனர். சுமார் 3 நிமிடங்கள் வித்தியாசத்தில் சக திறமையான சைக்கிள் ஓட்டப்போட்டியாளர்களை தோற்கடித்தார் கன்செல்லரா.

இரண்டாவது இடத்தினை பெற்றுக்கொண்ட சுவீடன் வீரர் கஸ்டொவ் லர்சொன், இவரை விட ஒரு நிமிடம் 27 செக்கன்கள் அதிகமாக எடுத்துக்கொண்டார்.

முன்றாவது இடத்தை பெற்றுக்கொண்ட டொனி மார்ட்டின், 2 நிமிடங்கள் 30 செக்கன்கள் அதிகமாக எடுத்துக்கொண்டார்.

இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், சுவிற்சர்லாந்துக்கு சொந்த மண்னில் பெருமை சேர்த்துள்ள கன்செலாரா, பரிசளிப்பின் போது கருத்து தெரிவிக்கையில், நான் மேலும் உறுதியாகியுள்ளேன். என்னுடைய சொந்த நாட்டில் நான் ஓடும் போது, எனது மக்களின் ஊக்கமும் உற்சாகமும் எனனையறியாமல் இயங்க வைத்தது. அது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது என தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த உலககிண்ண சைக்கிள் போட்டிகள் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது.ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 262.2 கி.மீ தூர ஒட்டப்போட்டியிலும் கன்செலாரா கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

 

 

 

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 25 September 2009 11:43
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது