பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

ஏரோட்டும் மக்கள் ஏங்கித் தவிக்கையில் தேரோட்டம் ஏன் உமக்கு தியாகராஜா? - கேட்டவர் கலைஞர்
Written by editor   
Tuesday, 27 July 2010 11:15
AddThis Social Bookmark Button
“ஏரோட்டும் மக்களெல்லாம் ஏங்கித் தவிக்கையிலே தேரோட்டம் ஏன் உமக்கு தியாகராஜா?” என  மாணவனாக இருந்த போது ‘முரசொலி’ வாரப் பத்திரிகையில் எழுதியவன் நான். ஓடாது நின்ற திருவாரூர் தேரை ஓடச் செய்ய நான் முதலமைச்சராக இருந்த போதே முயற்சிக்கப்பட்டது. அதற்காக எமது கட்சியின் கொள்கைகளை தவறவிட்டோம் என்றில்லை எனத் திருவாரூரில்,  அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்கி வைத்த,  தமிழக முதல்வர் கலைஞர் அங்கு உரையாற்றுகையில் குறிப்பிட்டார். அங்கு அவர் ஆற்றிய முழுமையான வடிவம் வருமாறு;

“ஏரோட்டும் மக்களெல்லாம் ஏங்கித் தவிக்கையிலே தேரோட்டம் ஏன் உமக்கு தியாகராஜா?” என்று நான் மாணவனாக இருந்த போது ‘முரசொலி’ வாரப் பத்திரிகையில் எழுதினேன். அதை நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நேரத்தில் சட்டமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினரான தம்பி காளிமுத்து பேசும்போது “ஒருகாலத்தில் “ஏரோட்டும் மக்களெல்லாம் ஏங்கித் தவிக்கையிலே தேரோட்டம் ஏன் உமக்கு தியாகராஜா?” என்று கேட்ட கலைஞர் அவர்களே, இன்றைக்கு நீங்கள் முதலமைச்சராகியிருக்கின்றீர்கள், இப்பொழுது நீங்களே இருபது ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த திருவாரூர்  தேரை ஓட்ட ஏற்பாடு செய்வதாக செய்தி வந்திருக்கிறதே, அன்று பாடியது  சரி தானா?” என்று என்னைக் கேட்டார்.

  நான் அவருடைய குறும்பைப் புரிந்துகொண்டு, “ஆமாம்;  “ஏரோட்டும் மக்களெல்லாம் ஏங்கித் தவிக்கையிலே தேரோட்டம் ஏன் உமக்கு தியாகராஜா?” என்று கேட்டு அன்றைக்கு திருவாரூரில் இருந்து வெளிவந்த முரசொலி வார ஏட்டில் எழுதியது நான்தான். இப்பொழுதும் அதைச் சொல்லுகிறேன். “ஏரோட்டும் மக்களெல்லாம் ஏங்கித் தவிக்கையிலே தேரோட்டம் ஏன் உமக்கு தியாகராஜா?” என்று அன்றைக்குக் கேட்டேன். நான் அப்போது கேட்டபோது, ஏரோட்டிய மக்களெல்லாம் ஏங்கித் தவித்தார்கள்.  இன்றைக்கு ஏரோட்டிய மக்களெல்லாம் ஏங்கித் தவிக்கவில்லை. நன்றாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். (பலத்த கைதட்டல்) ஆகவே நான் அந்தப் பாட்டை அப்பொழுது அந்தக்காலத்தை ஒட்டி எழுதியதிலே தவறில்லை. இந்தக் காலத்தை ஒட்டி அந்தத் தேரை ஓட்டுவதிலும் தவறில்லை” என்று சொன்னேன்.   (கைதட்டல்)

  ஏனென்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் நாங்கள் தந்தை பெரியார் அவர்களால், அறிஞர் அண்ணா அவர்களால் போற்றி வளர்க்கப்பட்ட தம்பிமார்கள் என்ற நிலையில், எந்தப் பதவியில் இருந்தாலும் - அமைச்சர்களாக இருந்தாலும், எம்.எல்.ஏ.க்களாக இருந்தாலும், எம்.பி.க்களாக இருந்தாலும், எந்தப் பதவியிலே இருந்தாலும் நாங்கள் எங்களுடைய கொள்கையிலே உறுதியானவர்கள். நாங்கள் கொள்கையை விட்டுத்தர மாட்டோம். அதிலே உறுதியாக இருப்பவர்கள். அதே நேரத்திலே அந்தக் கொள்கை வெறியின் காரணமாக - வேறொரு கருத்துக் கொண்டவர்களை, வேறொரு எண்ணம் படைத்தவர்களை, வேறொரு நம்பிக்கை கொண்டவர்களை நாங்கள் புண்படுத்துபவர்கள் அல்ல. அதனால்தான் நான் எழுதிய ‘பராசக்தி’ படத்தில், “கோயில் கூடாது என்பதல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது” என்று அன்றைக்கு நான் குறிப்பிட்டேன். இப்பொழுதும் அதைத்தான் சொல்லுகின்றேன்.

  திருவாரூரிலே இன்றைக்கு நான் காணுகின்ற காட்சி, உள்ளபடியே என்னுடைய கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சி மாத்திரமல்ல, கருத்துக்கு இனிப்பைத் தருகின்ற காட்சி. ஒரு காலத்தில் இந்தத் திருவாரூரில் பள்ளிச் சிறுவனாக, தெருவிலே விளையாடுகின்ற விளையாட்டுப் பிள்ளையாக இருந்து, இங்கிருந்து வளர்ந்து திராவிட இயக்கக் கொள்கையிலே என்னை இணைத்துக் கொண்டு பெரியாரின் மாணவனாக, பேரறிஞர் அண்ணாவின் தம்பியாக நான் என்னை மாற்றிக்கொண்டு, அவர்கள் வழியிலே நடைபோட்டு, இன்றைய தினம் உங்களுடைய அன்பால், ஆதரவால் நீங்கள் வழங்கிய கருணையினால், வழங்கிக் கொண்டிருக்கின்ற ஆதரவினால் தமிழகத்தை ஆளுகின்ற பொறுப்பை ஏற்றிருக்கிறேன் என்றால், அந்தப் பொறுப்பை ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும். உங்களால் வழங்கப்பட்ட பொறுப்பு, உங்களால் தரப்பட்ட பதவி, உங்களால் இடப்பட்ட வேலை - அதை நீங்கள் நிறைவடையத்தக்க வகையில், நீங்கள் திருப்தி அடையக்கூடிய வகையில் செய்து முடிப்பதுதான் என்னைப் போன்றவர்களுடைய கடமையாக, வேலையாக இருக்க வேண்டும் என்பதால்தான், அந்தப் பணிகளிலே ஒரு பகுதியாக திருவாரூர் மண்ணில் மருத்துவக் கல்லூரியும், மருத்துவத் துறை சார்ந்த பல்வேறு பணிகளும் தொடங்கி அதனுடைய திறப்பு விழாக்கள் இன்றைக்கு நடைபெற்றிருக்கின்றன.

  தம்பி  ஸ்டாலின் இங்கே எடுத்துக்காட்டியதைப்போல், ஏறத்தாழ ஐநூறு கோடி ரூபாய்க்கான பணிகள் இன்னும் நடைபெற இருக்கின்றன என்பது, இந்த வட்டாரத்திலே உள்ள மக்களுடைய நலனுக்காக நடைபெற இருக்கின்றன என்பது மகிழ்ச்சியூட்டக்கூடிய செய்தி. இது இந்த மண்ணுக்கு மாத்திரமல்ல, இந்த மாவட்டத்திற்கு மாத்திரமல்ல. தமிழகம் முழுமைக்கும் பலகோடி ரூபாய் மக்கள் நலனுக்காக, மக்களுடைய பல்வேறு திட்டங் களுக்காக, அவர்களுடைய நல்வாழ்வுக்காக செலவழிக்கப் படுகிறது.

  இந்த மருத்துவத்துறையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால் உங்களுக்கு நான் சொல்ல விரும்புகின்றேன். மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு - அதாவது சுகாதாரத்துறைக்கு - முன்பெல்லாம் சுகாதாரத்துறை என்று அழைக்கப்பட்ட இந்தத் துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை என்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே மாற்றப்பட்டு, அந்தத் துறையினுடைய உண்மையான குறிக்கோள் என்ன, பொறுப்பு என்ன என்பதை அந்தப் பெயராலேயே விளக்குவதற்காக அந்தப் பெயரை அமைத்துக் கொண்டு ஆட்சி செய்கின்ற திராவிட முன்னேற்றக் கழக அரசில் ஒன்றைமாத்திரம் உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

  2005 - 2006 ஆம் ஆண்டில் இந்தத் துறைக்காக - அதாவது சுகாதாரத்துறை என்று அழைக்கப்பட்டு, மக்கள் நல்வாழ்வுத்துறை என்று மாற்றப்பட்டுள்ள இந்தத் துறைக்கு 2005 - 2006 ஆம் ஆண்டு கடந்தகால (அ.தி.மு.க.)  ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதி 1,487 கோடி ரூபாய். இது கடந்த கால ஆட்சியில்.

  ஆனால் 2006ல் இந்த அரசு மீண்டும் பொறுப்பேற்ற பிறகு தமிழக மக்களின் நல்வாழ்வை மேம்படுத்த ஆண்டுக்காண்டு நிதிஒதுக்கீட்டை அதிகரித்து நடப்பாண்டில் - கடந்த ஆட்சியில் 1,487 கோடி ரூபாய் என்றிருந்த நிலையை மாற்றி - நடப்பாண்டில் 3,889 கோடியே 41 லட்சம் ரூபாய் என்று உயர்த்தி ஒதுக்கீடு செய்து, (கைதட்டல்)  இத்தகைய அரும்பணிகளை ஆற்றிவருகிறது.

    இப்படி ஆற்றி வருகின்ற அரும்பணிகளிலே ஒன்றாகத்தான், தமிழகத்தில் அனைவரும் கட்சிச் சார்பில்லாத முறையில், அனைவரும் பாராட்டுகின்ற வகையிலே மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களாக, மக்களுடைய உடல் நிலைக்காக, உடல் நிலையிலே ஏற்படுகின்ற கோளாறுகளைப் போக்குவதற்காக, அவர்களுடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக நாம் நிறைவேற்றி வருகின்ற திட்டங்கள் அனைத்திலும் சிகரம் வைத்தாற்போல் இருக்கின்ற திட்டம்தான் “உயிர்காக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம்”. இந்த கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 அழைப்பு - இந்த இரண்டையும் யாரும் மறக்க முடியாது. நம்மை எதிர்த்து பிரச்சாரம் செய்கின்ற கட்சிக்காரர்கள் ஆனாலும்கூட, அவர்களும் மனதுக்குள்ளேயே பாராட்டிக்கொண்டுதான் இதை விமர்சிக்க முடியும்.

  நான் இங்கே ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன். இது ஒரு அரசு விழா, பொது விழா. இதிலே அரசியல் பேச முடியாது. ஆனால் அரசியல் இல்லாமல் அரசு இல்லை. திருவள்ளுவர் ‘அரசியல்’ என்கின்ற ஒரு அதிகாரத்தையே திருக்குறளில் சேர்த்திருக்கிறார். வள்ளுவருக்கே குறள் எழுத அரசியல் பயன்பட்டது என்றால், வள்ளுவர் வழி நிற்கின்ற நமக்கு அரசியல் கூடாது என்ற பிடிவாதம் கூடாது என்பதால், அரசியலையும் நாம் தயவு செய்து நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இதிலே அரசியல் கூடாது. அரசியல் இல்லை. இங்கே நாம் எல்லோரும், எல்லாக் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஒரே விஷயத்தைத்தான் இங்கே பேசுகிறோம். வெவ்வேறு விஷயங்களைப் பேசவில்லை. வெவ்வேறு கருத்துக்களை, முரண்பட்ட கருத்துக்களை, எதிர்வாதங்களை இங்கே நாம் செய்யவில்லை. நாட்டுக்கு நன்மை செய்ய வேண்டும், எங்கள் தொகுதிக்கு  நன்மை செய்யவேண்டும், எங்கள் ஊருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு கட்சிக்காரர்களுக்கும் பேச சுதந்திரம் உண்டு. கருத்துக்களைச் சொல்ல - நாங்கள் செய்வதில் என்னென்ன தவறு என்பதை இடித்துக்காட்ட எல்லாக் கட்சிக்காரர்களுக்கும் சுதந்திரம் உண்டு, உரிமை உண்டு. அந்த உரிமையை எடுத்துக் கொண்டு எங்களிடத்திலே வாதிட்ட, வாதிடுகின்ற பல நண்பர்களை நான் மிகமிக நன்றாக அறிவேன்.

  இங்கே இந்த விழாவில் நம்முடைய நண்பர் சிவபுண்ணியம் அவர்கள் பேசும்பொழுது, தன்னுடைய வட்டாரத்தில், தொகுதியில் என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும் என்பதை எடுத்து வலியுறுத்தினார்.

  அதுமாத்திரமல்ல; சிவபுண்ணியம் இந்த விழாவிலே கலந்து கொண்டதே பாராட்டத்தக்க, வரவேற்கத்தக்க ஒரு அம்சமாகும். (கைதட்டல்) ஏனென்றால், “தீண்டினால் திருநீலகண்டம்” - இவர்களைப் பாராட்டவே கூடாது, பாராட்டினால் கட்சியிலே மேலிடம் நடவடிக்கை எடுக்கும் என்று கட்சியிலே ஒரு பிரிவு - நான் இந்தப் பிரிவுக்குள்ளே சொல்லவில்லை. இன்னொரு பிரிவில் அப்படிப்பட்ட தீர்மானங்களைப் போட்டுக்கொண்டு, அவர்களை கட்சியை விட்டு விலக்குகின்ற நிலை இருக்கும்பொழுது - அப்படி விலக்கப்பட்ட நிலை இருந்தாலும்கூட *நல்லதைச் சொல்ல நான் எங்கும் செல்லுவேன். எங்கும் குரல் கொடுப்பேன்”  என்கின்ற (கைதட்டல்) அந்த தைரியத்திலே உள்ளவர் நம்முடைய சிவபுண்ணியம் என்பதை நான் மிக நன்றாக அறிவேன்.

  உடனே, ஏதோ கருணாநிதி சூழ்ச்சிசெய்து சிவபுண்ணியத்தை மாட்டிவிடுகிறார் என்று அவரும் கருதமாட்டார். என்னுடைய நல்ல உள்ளம் அவருக்குத் தெரியும். அவருடைய தூய உள்ளம் எனக்கும் புரியும். எனவே அத்தகைய கலவரத்திலே நான் இறங்க விரும்பவில்லை. எதற்காகச் சொல்கிறேன் என்றால், ஒரு பொதுவான மக்கள் நலம், அதிலே கட்சி கிடையாது. ஒரு வாய்க்காலை வெட்ட வேண்டும், ஒரு ஆற்றுக்கு அணை கட்டவேண்டும், ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்ட வேண்டும் என்றால் அதிலே அரசியல் கிடையாது. எல்லோரும் சேர்ந்து,  அந்த ஊர் மக்களெல்லாம் சேர்ந்து அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, செய்ய வேண்டிய பொதுக்காரியம் - அப்படிப்பட்ட பொதுக்காரியங்களை ஒருஅரசு செய்யும்போது அதிலே கலந்துகொள்வதுதான் அரசியல் கட்சி எதுவானாலும் - தங்களுடைய கட்சிக் கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டு இணைந்து செயல்படுவது - அப்படி இணைந்து செயல்பட்டால் இன்னும் பல காரியங்களை நாம்   தமிழகத்திலே செய்ய முடியும்.

  என்னைப் பொறுத்தவரையில் நான் யாரிடத்திலும் அதற்காக மனம் வருத்தப்படுபவன் அல்ல. என்னைக் குறை கூறினால்கூட, என்னைச் சுட்டிக்காட்டி, இந்தத் தவறு செய்கிறாய் என்று குற்றம் சாட்டினால்கூட, அது உண்மையா என்பதை ஆராய்ந்து பார்த்து, தவறு என்றால் திருத்திக்கொள்கின்றவன்தான் இந்தக் கருணாநிதி என்பதை அறியாதவர்கள் அல்ல, எதிர்க்கட்சியிலே உள்ளவர்கள்.

  அப்படிப்பட்ட ஒரு நிலையிலே நடைபெறுகின்ற இந்த அரசு, மக்கள் நன்மைகளை மாத்திரம் மனதிலே பதியவைத்துக்கொண்டு ஆற்றுகின்ற பணிகளில் ஒன்றுதான் இன்றைக்கு ஆற்றியிருக்கின்ற இந்தப் பணி, இன்றைக்கு நடைபெற்றிருக்கின்ற இந்தத் திறப்பு விழாக்கள்.

  நான் இங்கே வந்து அமர்ந்ததும், என்னுடைய நண்பன் தென்னனைப் பார்த்து  ‘‘என்னப்பா திருவாரூரே மாறிப்போய்விட்டதே’’ என்று  வியப்புடன் சொன்னேன். காரணம்,  இந்த விளமல் கிராமத்துப் பகுதியை நான் பல தடவை பார்த்திருக்கிறேன். இவ்வளவு பரவசமடைந்திருக்கின்ற அளவுக்கு விளமல் கிராமம் என்றைக்கும் காட்சியளித்ததில்லை. இன்றைக்கு விளமல் - நாம் விளம்ப முடியாத அளவுக்கு அவ்வளவு அழகாக, அவ்வளவு ரம்மியமாக -  இத்தனை கட்டிடங்களா? நான் திருவாரூரிலே ஒரு கிராமத்தைத்தான் பார்க்கிறேனா?  இல்லை, தமிழ்நாட்டிலே உள்ள ஒரு கிராமத்தைத்தான் பார்க்கிறேனா? அல்லது  இங்கிலாந்து நாட்டிலே லண்டன் நகரத்துக்குப் பக்கத்திலே உள்ள ஒரு கிராமத்தைப் பார்க்கிறேனா? என்று ஐயப்படுகின்ற அளவுக்கு,  சந்தேகப்படுகின்ற அளவுக்கு, இப்படி திரும்பி ஒருமுறை கண்ணைச் சுழற்றினால் கட்டிடங்களாக - வரிசையாகத் தென்படுகின்ற அந்தக் காட்சியை நாம் காணுகின்றோம்.

  இந்தக் காட்சி எனக்கு எந்த எண்ணத்தை ஏற்படுத்துகிறதென்றால், இது திருவாரூரோடு நிற்காமல், தஞ்சாவூரோடு நிற்காமல், குடந்தையோடு நிற்காமல், மன்னார்குடியோடு நிற்காமல்,  எல்லா ஊரிலும் இத்தகைய கட்டிடங்கள், இத்தகைய வளர்ச்சிகள் தமிழகத்திலே வர வேண்டும், அந்தக் காட்சியைக் காண வேண்டும். நான் இருந்து காணா விட்டாலும், தமிழகத்திலே  திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், திராவிட இயக்கத்தின் குறிக்கோளை தங்களுடைய உள்ளத்திலே பதிய வைத்துக் கொண்டிருப்பவர்கள் காணக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

  அந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தரக்கூடிய நல்ல உள்ளம் படைத்தவர்கள்தான் என் எதிரிலே அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதை நான் மன மகிழ்ச்சியோடு எடுத்துச் சொல்லி, இந்த விழாவிலே உங்களோடு  கலந்துகொள்கின்ற வாய்ப்புப் பெற்றமைக்காக நன்றியைத் தெரிவித்து விடைபெறுகின்றேன்.

  இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார் எனத் தமிழகத்திலிருந்து கிடைக்கப் பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்கள்

avatar Er.L C NATHAN
0
 
 
""அடைந்தால் திராவிடநாடு,அடையாவிட்டால் சுடுகாடு"" என்று கூறி மக்களை ஏமாற்றி,திராவிடனாடு ""கொள்கையை"" கைவ்ட்டது யார் ? மானில சுயாட்சி வேண்டும்,ஒவ்வொறு மானிலத்திற்கும் தனிக் கொடி வேண்டும் என்று கேட்டு,பின்பு அந்த ""கொள்கையை"" கைவிட்டது யார் ? இப்போது அவரது ""கொள்கை"" தன் பிள்ளை, தன் சுற்றம், "பணம்"சேர்க்க வேண்டும், என்பதுதான் !!பொது மக்களாவது,மண்ணாவது!!!!!!!!!!!!!!!!
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Tuesday, 27 July 2010 11:31
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது