சினிமா கேலரி

விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

திமிறினார் சரத் பொன்சேகா, பதறினர் பாராளுமன்ற உறுப்பினர், கைதின்போது பரபரப்பு!
Written by editor   
Tuesday, 09 February 2010 04:47
AddThis Social Bookmark Button

" எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள்  குறித்து ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் பேசிக்கொண்டிருந்த நேரம் திடீரென அலுவலகத்தை உடைத்துக் கொண்டு இராணுவத்தினர் உட் புகுந்தனர். எந்திவித உரையாடலுமின்றி,  உடனடியாகவே ஜெனரல் பொன்சேகாவை தரதரவென  பலவந்தமாக  இழுத்துச் சென்றனர்."

"அவ்வாறு இழுத்துச்சென்றபோது, அவர் கால்களை உதறினார்.  இழுத்துச் செல்லும் நிலையில் இருந்து மீண்டுவிட  பொன்சேகா திமிறிய போது,  படையினரில் ஒருவர் பொன்சேகாவின் பிடரியில்   அடித்ததைக் கூடக் காணமுடிந்தது. பொன்சேகாவின் கைது முயற்சியை முதலில் நாம் ஆட்சேபித்த போதும், இராணுவத்தினரின் செயற்பாட்டை எம்மால் தடுக்க முடியவில்லை"

 "முன்னாள் இராணுவத்தளபதி ஒருவரை, நாயை இழுத்துச் செல்வது போல இழுத்துச்சென்று கீழ் தளத்தில் வைத்து கைகளில் விலங்கிட்டுக் கொண்டு சென்றது சிறிலங்கா இராணுவம்." என ,  சரத் பொன்சேகாவின் கைதினை நேரில் பார்த்த பாராளுமன்ற உ றுப்பினர் ஒருவர் அதிர்ச்சி மாறாத நிலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

சிறிலங்காவின் போரியல் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணையில், தனக்குத் தெரிந்த உண்மைகள், தான் கேள்விப்பட்ட விடயங்கள், அனைத்தையும் சாட்சியப்படுத்தப் போவதாக சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் இராணுவத் தளபதிநேற்றுத் தெரிவித்திருந்தார்.  இவ்வாறு அவர் தெரிவித்திருந்திருந்த சிலமணிநேரங்களில், அவரது அலுவலகத்தில் புகுந்த இராணுவத்தினரால் இந்தக் கைது இடம் பெற்றிருக்கிறது. இக் கைது முயற்சி நடைபெற்ற வேளையில், சரத் பொன்சேகாவுடன்,  எதிர்கட்சிப் பிரமுகர்கள் பலரும் இருந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் பாராணுமன்ற உறுப்பினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

"இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் மிகமிகக் கேவலமானது. அநாகரிகமானது. முன்னாள் இராணுவத் தளபதி ஒருவரின் கைதின் போதே இவ்வளவு அநாகரிகமாக நடந்து கொண்டுள்ள இராணுவம், தமிழ் மக்களைப் பயங்கரவாதிகளாகக் கைது செய்யும் போது எப்படி நடந்திருப்பார்கள் என்பதை  உணரமுடிகிறது"  என  மதற்றுமொரு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் குறிப்பிடுகையில், "ஜெனரல் பொன்சேகாவுடன் அவரது ஊடகச்செயலாளர் சேனக டி சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார். பொன்சேகாவின் அலுவலகத்துக்குள் அத்து மீறி இராணுவத்தினர் பாய்ந்தபோதே எம்.பிக்களான எங்களின் மெய்காவலர்களின் ஆயுதங்களையும் அவர்கள் பறித்துவிட்டனர். நாங்கள் கைதினைத் தடுக்க முயற்சித் போதும், இராணுவத்தினரை மீறி எதுவும் செய்ய முடியாத நிலையே அங்கு காணப்பட்டது" எனத் தெரிவித்தார். 

பொன்சேகா கைது செய்யப்பட்ட சமயம், அவரது அலுவலகத்தில், பாராணுமன்ற உறுப்பினர்களான,  மனோகணேசன்,ரவூப் ஹக்கீம், ஹந்துன்  நெத்தி, சோமவன்ஸ ஆகியோர் பொன்சேகாவுடன் உரையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். பொன்சேகா கைது செய்யப்பட்ட பின்னரும்,  சுமார் அரை மணிநேரத்துக்கும் மேலாக அவர்கள் அங்கிருந்து வெளியேற இராணுவத்தினர் வெளியேற அனுமதிக்கவில்லை என,அறியப்படுகிறது.

இராணுவக் குற்றங்கள் தொடர்பில் சரத் பொன் சேகா கைது செய்யப்பட்டிருப்பதாக,  சிறிலங்காவின் புதிய இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்  பிரசாத் சமரசிங்கவை மேற்கோள்காட்டி, சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.  சிறிலங்கா  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்கிரம சிங்க, ஆகியோர் நாட்டில் இல்லாதபோது நடைபெற்றிருக்கும்  இந்த முக்கிய கைதுச் சம்பவம், சிறிலங்காவின் உள்ளக அரசியல் நகர்வுகளில் பலத்த சந்தேகங்களைத் தோற்றுவிப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனநாயக அரசியல் போர்வையில், இராணுவ சர்வாதிகார ஆட்சியொன்றை நோக்கி, சிறிலங்காவின் அரசியல் நகர்ந்துவருகிறதா என அச்சமடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதே சமயம்  நாட்டின் உண்மைநிலைகள் குறித்து அறியத்தக் கூடிய செய்தியாளர்கள் பலர் அச்சமடைந்த நிலையில் மெளனமாகி வருவதாகவும், மேலும் பலர் நாட்டைவிட்டு வெளியேற முயற்சிப்பதாகவும் தெரியவருகிறது.

 

உங்கள் கருத்துக்கள்

avatar babu
0
 
 
யெரந்து பொன டமில் மக்கெலின் அன்மா ஒருதரயும் சும்மா விடாது
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar aarveeyem
0
 
 
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar tamilan
+1
 
 
பொன்சாகோ, ராஜபக்ச்சே இருவருக்கும் இனி சாவுதான் போல‌ 10 கோடி
த‌மிழ‌னினத்தின் சாப‌ம் ஒழிய‌டும் த‌மிழ் விரோதி
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar mohamed
0
 
 
இரைவன் மிக் மிக பெரியவன்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Tuesday, 09 February 2010 05:34
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது