பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

சிறிலங்காவில் மறுக்கப்படும் கருத்துச் சுதந்திரம் - ஊடகவியலாளர்கள்
Written by editor   
Monday, 08 February 2010 08:16
AddThis Social Bookmark Button

ஜனாதிபதியின் வெற்றியின் பின்னர் ஊடகங்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து தெரியவந்தது. இது இலங்கையின் ஜனநாயகத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும் பாரதூரமான தாக்குதலாகும். இந்த நிலைமையை மாற்றத் தவறினால் மக்களின் ஜனநாயக உரிமைகள் பாரதூரமான ஆபத்தை எதிர்நோக்கக் கூடும் என ஒடுக்குமுறைக்கெதிரான ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களின் கருத்து கூறும் உரிமையைப் பாதுகாக்க அணி திரள்வோம் என்ற தலைப்பில் தகவலை அறிந்துகொள்ளும் உரிமையைப் பாதுகாப்பதற்காகத் தலையிடுமாறு மக்களிடம் வேண்டிக்கொள்வதாக அந்த ஊடகவியலாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெற்றி அறிவிக்கப்பட்டவுடன் ஊடகங்களுக்கெதிரான ஒடுக்குமுறைகள் அதிகரித்துள்ளன. நாட்டில் கருத்து கூறும் சுதந்திரத்தையும் மக்களின் தகவல் அறியும் உரிமைக்கும் இந்த செயற்பாடுகள் பெரும் தடையாக அமைந்துள்ளன. இந்த ஒடுக்குமுறையானது ஊடகவியலாளர்களின் உயிருக்குக் கூட அச்சுறுத்தலாக மாறிவருகிறது. லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் பிரகீத் ஹெக்நேலியகொட கடத்திச் செல்லப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ளன.

இதுவரை அவர் குறித்த எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை. லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் உள்ளிட்ட பல இணையத்தளங்களுக்கு பலமுறை தொழில்நுட்பத் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. இவை அரசாங்கத்தின் அனுசரணையோடு இடம்பெற்றிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.  அதேபோல், இனந்தெரியாத ஆயுதக் குழுவினர் அடிக்கடி இணையத்தள ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் அரச ஊடகங்களில் பணியாற்றும் மாற்றுக் கருத்துக்கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் பெரும் இடைய+றுகளைச் சந்திக்க நேர்ந்துள்ளது.

அதேபோல் அரச விரோத சதித் திட்ட குற்றச்சாட்டின் பேரில் பல ஊடகவியலாளர்கள் பணியிலிருந்து அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய ஒரு ஊழியர் விலக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒன்பது ஊடகவியலாளர்கள் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர். இதனைத்தவிர மேலும் 21 பேர் ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, சுயாதீன தொலைக்காட்சி சேவை மற்றும் லக்ஹன்ட வானொலியில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு இடைய+றுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனியார் தொலைக்காட்சி நிறுவனமான சிரச ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் அண்மைக்காலங்களில் பல சந்தர்ப்பங்களில் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த தாக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் உள்ளனர். மாற்றுக் கருத்துக்களைக் கொண்டுள்ளவர்களுக்கெதிராக அரசாங்கம் ஆரம்பித்துள்ள ஒடுக்குமுறையின் ஒருபகுதியாகவே இந்த அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
லங்கா பத்திரிகையின் ஆசிரியர் சந்தின சிறிமல்வத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளரின் விசேட தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதன்பின்னர் அரசாங்கம் லங்கா பத்திரிகைக்கு எதிராக பாரிய சேறுப+சும் பிரசாரங்களை முன்னெடுத்ததுடன் அந்தப் பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் பயங்கரவாதக் குழுக்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக தேசிய ரூபவாஹினி மற்றும் அரச ஊடகங்கள் வழியாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
லங்கா பத்திரிகைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீதிமன்றம் விலக்கிய போதிலும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்று பல்வேறு வகையிலான அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் மேற்கொண்டுள்ளன.

அத்துடன் லங்கா பத்திரிகை முகவர்களை அச்சுறுத்தி அதனூடாக பத்திரிகை விநியோகத்தைத் தடுக்கும் நடவடிக்கையிலும் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது என அடக்குமுறைக்கெதிரான ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Monday, 08 February 2010 08:39
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது