விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
பயில்வோம் பங்குச்சந்தை - பாகம் 24!!..BOSS technical analysis in tamil தங்களின் youtube வீடியோ பதிவு பார்த்தேன் மிகவும் நன்றாக...
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..என்ன பேசி என்ன பயன் ?ஏமந்தது அவாகள் அல்ல நம்ம மக்கள் தான்,
சா
...
பயில்வோம் பங்குச்சந்தை - பாகம் 24!!..நல்ல செயல்!
இந்த முயற்ச்சிக்கு நன்றி
உண்மைவிரும்பி(எ)
...
இலவச நியூஸ்லெட்டர்..
| பாடசாலை செல்லாத 30,000 சிறுவர்கள் முகாம்களில்? |
| Written by Sara |
| Friday, 03 July 2009 23:40 |
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து, மெனிக்பாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களில், சிறார்களின் எதிர்கால வாழ்வு மிகுந்த கேள்விக்குறியாகியுள்ளது.கடந்த வருடத்தின் பிற்பகுதியிலும், இவ்வருடத்தின் ஆரம்பம் முதலும், வடக்கில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்த தீவிரமான யுத்தத்தினால் இச்சிறார்களின் கல்வி நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. வடக்கில் புலமைப்பரிசில் பரீட்சை, உயர்தர, சாதாரண தர பரீட்சைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது கூட, ஷெல் தாக்குதல்களும், குண்டு வீச்சு தாக்குதல்களும் இவர்களை கடுமையான பாதிப்புக்குள்ளாக்கி இருந்தது. தற்போது யுத்தம் முடிவடைந்துள்ள போதும், இம்முகாம்களில் உள்ள சிறார்களின் கல்வி நடவடிக்கைகள் சீரற்ற முறையில் நடாத்தப்படுகின்றன. அரசாங்கத்தினால் சிறார்களுக்கான இல்லம், பிரத்தியேக கல்விக்கூடங்கள் என்பன, இப்பகுதிகளில் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுவதுடன், அதற்கான திறப்பு விழாக்களும் நடைபெற்று வந்தன. எனினும், 30, 000 த்திற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் இன்னமும் இம்முகாம்களில் சாதாரண அப்பியாசக்கொப்பிகள் கூட இல்லாத நிலையில் காணப்படுவதால், பாடசாலைக்கும் செல்வதில்லை என தொண்டு நிறுவனத்தகவல்கள் வெளிவந்துள்ளன. பாடசாலை சீருடைகள், கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதணிகள் இல்லாத காரணத்தினால் இவர்கள் பாடசாலைக்கு செல்லப்படுதல் மறுக்கப்பட்டுள்ளதாக, அரச சார்பற்ற நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. வடக்கில் இம்முகாம் மக்களுக்காக பிரத்தியேக வணிக வியாபார நிலையங்கள், கூட்டுறவு திணைக்களங்களென, வர்த்தக இலாபம் கருதி பல ஆரம்பிக்கப்பட்டு வருகின்ற போதிலும், இச்சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்க எந்த வர்த்தகர்களும் முன்வரவில்லை எனவும், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே இச்சிறார்கள் பெற்றோர் பாதுகாவலர் இன்றி மிகுந்த மன உளைச்சளுக்கு உள்ளாகியிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த சிறார் போராளிகள் என அரசு தரப்பினால் தெரிவிக்கப்பட்டு, புனர்வாழ்வு நிலையங்களுக்கு தனியாக அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஐ.நாவின் செயலாளர் நாயகம், பான் கீ மூன் 'இடைத்தங்கல் முகாம்களில் உள்ள சிறார் போராளிகள் மீது விசேட கவனம் செலுத்த வேண்டுமெனவும், அவர்களை மீண்டும் தமது தேவைகளுக்காக பயன்படுத்துபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் 30,000 சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை முற்றாக பாதிப்படைய செய்து, அவர்களின் சுய அறிவுத்தேடலினை மழுங்கடிக்க செய்து வரும், அரசாங்க செயற்பாடுகளுக்கு எதிராகவும், ஐ.நா கேள்வியெழுப்பியிருக்கலாமே என ஆதங்கப்படுகிறது, இவ் இடம்பெயர்ந்தோர் நலனில் அக்கறை கொண்டுள்ள சமூகம். விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் பின்னர் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் உள்ள மக்களிடம் வெறும் கூடாரங்கள் மாத்திரமே இருப்பதாகவும் அவர்களிடம் வேறு எந்தப் பொருளும் இல்லை எனவும் டென்மார்க் அகதிகள் பேரவை கோடிட்டு காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. |
| Last Updated on Friday, 03 July 2009 23:52 |
- மனிதனும் - விலங்குகளும் - அன்பும்
- கனவு நனவாக
- லாகூரில் தொடரும் தற்கொலைக்குண்டு தாக்குதல் - 63 பேர் பலி!
- உலக கோடீஸ்வர பட்டியல் - சுவாரஷ்யமான புதிய தகவல்கள்!
- சென்னையில் புதிய சட்ட மன்றம் திறப்பு, இராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க மறுப்பு.
- உலகின் சிறந்த அரசியல் தலைவராக மன்மோகன் சிங் தெரிவு?!
- இலங்கை அகதிகள் தொடர்பில், ஐ.நா புதிய மீளாய்வு - புகலிட கோரிக்கை, நிராகரிக்கும் சாத்தியம்?



டுவிட்டர் 
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து, மெனிக்பாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களில், சிறார்களின் எதிர்கால வாழ்வு மிகுந்த கேள்விக்குறியாகியுள்ளது.கடந்த வருடத்தின் பிற்பகுதியிலும், இவ்வருடத்தின் ஆரம்பம் முதலும், வடக்கில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்த தீவிரமான யுத்தத்தினால் இச்சிறார்களின் கல்வி நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. வடக்கில் புலமைப்பரிசில் பரீட்சை, உயர்தர, சாதாரண தர பரீட்சைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது கூட, ஷெல் தாக்குதல்களும், குண்டு வீச்சு தாக்குதல்களும் இவர்களை கடுமையான பாதிப்புக்குள்ளாக்கி இருந்தது.
உங்கள் கருத்துக்கள்